RSS

Saturday, February 26, 2011

தொழுகை


தொழுகை பற்றிய கேள்வி பதில்

1.முஸ்லிம்கள் நாளொன்றுக்கு எத்தனை முறை தொழுகையை நிறைவேற்ற வேண்டும்?
முஸ்லிம்களுக்கு நாளொன்றுக்கு ஐந்து நேரத் தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளது
2. ஐந்து நேரத் தொழுகைகளின் பெயர்களைக் கூறுக!
 fபஜ்ர், லுஹர், அஸர், மஃரிப் மற்றும் இஷா


3. பஜ்ர் தொழுகையின் நேரம் எது?
 அதிகாலை உதயமானதிலிருந்து சூரியன் உதயமாகும் வரைக்குமாகும்

4. லுஹர் தொழுகையின் நேரம் எது?
 சூரியன் உச்சி சாயத்துவுங்கியதிலிருந்து ஒரு பொருளின் நிழல் அதன் உயரத்தின் அளவிற்கு வரும் வரைக்குமாகும்.
5. அஸர் தொழுகையின் நேரம் எது?
 ஒரு பொருளின் நிழல் அதன் உயரத்தின் அளவை அடைந்தவுடன் ஆரம்பமாகி சூரியன் மறையும் வரை நீடிக்கின்றது
6. மஃரிப் தொழுகையின் நேரம் எது?
 சூரியன் மறைந்ததிலிருந்து செம்மேகம் மறையும் வரைக்குமாகும். செம்மேகம் என்பது சூரியன் மறைந்த பிறகு தோன்றுவதாகும்
7. இஷா தொழுகையின் நேரம் எது?
 செம்மேகம் மறைந்ததிலிருந்து இரவின் பகுதி வரைக்குமாகும்


8.பாங்கு துஆவை ஓதுவதால் கிடைக்கும் நன்மை என்ன?
பாங்கு துஆவை ஓதுவதால் அவருக்கு மறுமையில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்கும். ஆதாரம் : புகாரி.

9.தொழுகையின் போது எதை முன்னோக்கித் தொழ வேண்டும்?
 கஃபாவை முன்னோக்கித் தொழ வேண்டும்.

10.fபர்லான தொழுகைகள் எத்தனை ரக்அத்துகள்?
 பஜ்ர்-2, லுஹர்-4, அஸர்-4, மஃரிப்-3, இஷா-4

 11.சுன்னத்தான தொழுகைகள் எத்தனை ரக்அத்துகள்?
 fபஜ்ர் முன் சுன்னத்து-2, லுஹர் முன் சுன்னத்து-4 (2+2), பின் சுன்னத்து-2, மஃரிப் பின் சுன்னத்து-2, இஷா பின் சுன்னத்து-2.
குறிப்பு: லுஹருடைய முன் சுன்னத்து நான்கு ரக்அத்துகளை இரண்டிரண்டு ரக்அத்துகளாக தொழ வேண்டும்.

12.சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றுவதால் என்ன நன்மை கிடைக்கும்?
 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு நாளைக்கு 12 ரக்அத்துகள் நஃபிலாக (உபரியாக) யார் தொழுது வருகிறாரோ அவருக்கு சுவனத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படும்”.


தொடரும்.....


உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கும் சொல்லிக் கொடுங்கள்

0 comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்கள்

நன்றி

தமிழ்,ஆங்கில இஸ்லாமிய இணையதளங்களுக்கு ஜஜாக்குமுல்லாஹூ கைர்.