RSS

Wednesday, July 21, 2010

இஸ்திஃகாரா துஆ



للَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمَكَ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

الْعَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ، وَتَعْلَمُ، وَلَا أَعْلَمُ، وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ،         
اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ- خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي      

   وَعَاقِبَةِ أَمْرِي- عَاجِلِهِ وَآجِلِهِ- فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي

فِيهِ، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ 

أَمْرِي- عَاجِلِهِ وَآجِلِهِ- فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِيَالْخَيْرَ

حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي بِهِ".

Friday, July 16, 2010

உள்ளங்கள் உறுதியாக

<><><><><><><><><><>

يَا مُقَلَّبَ الْقُلُوْبِ ثَبِّتْ قَلْبِيْ عَلَى دِيْنِكَ
யா முகல்லிபல் குலூபி ஃதப்பித் கல்பி அலா தீனிக

உள்ளங்களை புரட்டுபவனே! என் உள்ளத்தை உன் மார்க்கத்தில் நிலைத்து நிற்கச் செய்வாயாக!

أَللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ
அல்லாஹும்ம முஸர்ரிஃபல் குலூபி ஸர்ரிஃப் குலூபனா அலா தாஅதிக
யாஅல்லாஹ்! உள்ளங்களை திருப்பக் கூடியவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பக்கம் திருப்புவாயாக!

உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கும் சொல்லிக் கொடுங்கள்

Thursday, July 8, 2010

அனைத்துக்காரியமும் இலகுவாக



யா அல்லாஹ்! நீ எதை இலகுவாக ஆக்குகின்றாயோ அதைத்தவிர இலகுவென்பது இல்லை; நீயோ கவலையை (கஷ்டத்தை)க் கூட நீ நாடினால் இலகுவாக ஆக்கிடுவாய். நூல்்: இப்னுஹிப்பான்













உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கும் சொல்லிக் கொடுங்கள்

Saturday, June 12, 2010

கவலையா? கடன் தொல்லையா?



 اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ
   
وَأَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ وَأَعُوذُ بِكَ مِنَ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ

الرِّجَالِ  

அல்லாஹீம்ம இன்னீ அ’ஊதுபிக மினல் ஹம்மி வல்ஹஜ்னிவ அ;ஊதுபிக மினல் அஜ்’ஜி வல்கஸ்லி வ அ’ஊதுபிக மினல் புக்லி வல்ஜுப்னி வ அ’ஊதுபிக மினல் கலபத்தித் தெய்னி வ கஹ்ரிர் ரிஜால்.

 பொருள்;  அல்லாஹ்! துக்கம், கவலை, இயலாமை, சோம்பல், கருமித்தனம், கோழைத்தனம், கடன் மிகைத்து விடுதல், ஆகியவற்றிலிருந்து உன்னைக்கொண்டு பாதுகாப்பு தேடுகிறேன.



உங்களுக்கு மனப்போராட்டமா?






أَللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُوْ، فَلاَ تَكِلْنِيْ إِلَى نَفْسِيْ طَرَفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِيْ


 شَأْنِيْ كُلَّهُ، لاَ إِلَـهَ إِلاَّ أَنْت


அல்லாஹும்ம  ரஹ்மதக அர்ஜூ,ஃபலா தகில்னீ இல நஃப்சீ தர்ஃபத


 ஐனின், வ அச்லிஹ்லீ ஷஃனீ குல்லஹு,லா இலாஹ இல்லா அன்த.




பொருள்; யாஅல்லாஹ்! நான் உனது அருளையே ஆதரவு வைத்துள்ளேன்.
(அதனை) கண் மூடித்திறக்கும் அளவிற்குக் கூட (நிறுத்தி) எனது
 உள்ளத்தை ஏங்க வைத்து விடாதே!. மேலும் என்னுடைய அனைத்து
காரியங்களையும் சீர்படுத்துவாயாக! வணக்கத்திற்குரியவன் உன்னைத்
 தவிர வேறு யாருமில்லை.


உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கும் சொல்லிக் கொடுங்கள்



விசாரனை எளிதாக

 .
         أَللَّهُمَّ حَاسِبْنِيْ حِسَابًا يَسِيْرًا 


யாஅல்லாஹ்! என்னை (மறுமையில்) மிகவும் எளிதாக விசாரணை செய்வாயாக!



உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கும் சொல்லிக் கொடுங்கள்

Saturday, June 5, 2010

மாணவர்களுக்காக




  • நம் குழந்தைகளின் அறிவுத்திறனுக்காக.......
                                                                                                                            
                                           رَبِّ  زِدْنِيْ عِلْمًا
  •                      இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!
  • divider Pictures, Images and Photos
  • நம் குழந்தைகளின் பேச்சுத்திறனுக்காக.....                                                                           رَبِّ اشْرَحْ لِيْ صَدْرِيْ وَيَسِّرْ لِيْ أَمْرِي
            وَأحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِيْ يَفْقَهُوْا قَوْلِي                               
                                                                                                                                     
                       இறைவா! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப் படுத்தி) விரிவாக்கித் தருவாயாக! என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக! என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!
divider Pictures, Images and Photos
  • நம் குழந்தைகளின் நுண்ணறிவுக்காக.....
  •                               
  •                    رَبِّ هَبْ لِيْ حُكْمًا وَأَلْحِقْنِيْ بِالصَّالِحِيْن

                               என் இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக! 26:83
  • divider Pictures, Images and Photos
  • பயனுள்ள கல்விக்காக......
                    
  •   أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا
  • ، وَرِزْقًا طَـيِّـبًا،وَعَمَلاً مُتَقَبَّل        
  •                                         யாஅல்லாஹ்! பயனளிக்கும் கல்வியையும் தூய்மையான (ஹலாலான) உணவையும் ஏற்றுக்கொள்ளப்படும் நல்லறத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.
  divider Pictures, Images and Photos

  • أَللَّهُمَّ انْفَعْنِيْ بِمَا عَلَّمْتَنِيْ،وَعَلِّمْنِيْ مَا يَنْفَعُنِيْ وَزِدْنِيْ عِلْمًا           


  •                                          யாஅல்லாஹ்! எனக்கு நீ கற்றுக் கொடுத்தவற்றை எனக்கு பயனுள்ளதாக ஆக்கிவைப்பாயாக! எனக்கு பயனளிப்பவற்றையே கற்றுத் தருவாயாக! மேலும் என்னுடைய கல்வியை அதிகப்படுத்துவாயாக!
divider Pictures, Images and Photos
              
        أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا ، وَأَعُوْذُبِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ

  •   யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் பயனுள்ள கல்வியைக் கேட்கிறேன். மேலும் பயனளிக்காத கல்வியை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
divider Pictures, Images and Photos
  • பரீட்சை இலகுவாக.....

  •                                                யா அல்லாஹ்! நீ எதை இலகுவாக ஆக்குகின்றாயோ அதைத்தவிர இலகுவென்பது இல்லை; நீயோ கவலையை (கஷ்டத்தை)க் கூட நீ நாடினால் இலகுவாக ஆக்கிடுவாய். நூல்்: இப்னுஹிப்பான்.
divider Pictures, Images and Photos

உங்களின் சந்ததிகளுக்காக



رَبِّ لاَ تَذَرْنِيْ فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِيْنَ
[Qur’an 21:89]


 இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதிருப்பாயாக! நீயோ அனந்தரங் கொள்வோரில் மிக மேலானவன்
divider Pictures, Images and Photos


رَبِّ هَبْ لِي مِنْ الصَّالِحِينَ
Qur’an 37:100]


இறைவா! எனக்கு ஸாலிஹான (நற்குணமுடைய) மகனைத் தருவாயாக!
divider Pictures, Images and Photos

رَبِّ هَبْ لِي مِنْ َلدُنْكَ ُذرِّيَّةً َ طيِّبًَة ِإنَّكَ سَمِيعُ الدُّعَاءِ


[Qur’an 3:38]


இறைவா! உன்னிடமிருந்து எனக்கு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுப்பவனாக உள்ளாய்.
divider Pictures, Images and Photos

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا

أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ

أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ


"எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்." (2:128)
divider Pictures, Images and Photos

 رَبِّ اجْعَلْنِيْ مُقِيْمَ الصَّلاَةِ وَمِنْ ذُرِّ يَّـتِيْ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

 இறைவா! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும் என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவா! (எங்கள்) பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக.


divider Pictures, Images and Photos




 உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கும் சொல்லிக் கொடுங்கள்

குடும்பத்திற்காக

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّ يَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ إِمَامًا

எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும் எங்கள் சந்ததிகளிடமிருந்தும் எங்களுக்கு கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! மேலும் பயபக்தியுடைய வர்களுக்கு எங்களை வழி காட்டியாக ஆக்குவாயாக!






































உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கும் சொல்லிக் கொடுங்கள்

உங்கள் பெற்றோருக்காக

واخفض لهمأ جناح الذل من الرحمة                                  
وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِى صَغِير

இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீர்களா
க.மேலும் என் இறைவனே !நான் சிறு பிள்ளையாக இருந்த பொழுது என்னை (பரிவோடு)அவ்விருவரும் வளர்த்தது போல் ,நீயும் அவர்களுக்கு கிருபை செய்வாயாக! என்று கூறிப் பிரார்த்திப்பீராக!
17:24




 .رَبِّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحً
تَرْضَاهُ وَأَدْخِلْنِيْ بِرَحْمَتِكَ فِيْ عِبَادِكَ الصَّالِحِيْنَ

என் இறைவா! என் மீதும் எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும் நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது நல்லடியார்களில் என்னையும் உனது அருளால் சேர்ப்பாயாக!
 27 : 19








 رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ ﴿٤١
"எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக" 14:41




உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கும் சொல்லிக் கொடுங்கள்

Monday, May 31, 2010

மன்னிப்பை நாடி

அனுதினமும் ஓதுவோம்




رَبنَّاَ آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ

எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம். நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களில் நீ மிகமேலானவன்.23;109
divider Pictures, Images and Photos


رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம். எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களை காப்பாற்றுவாயாக! 3;16
divider Pictures, Images and Photos



رَبَّنَا أَتْمِمْ لَنَا نُوْرَنَا وَاغْفِرْلَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

எங்கள் இறைவா! எங்களுக்கு எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.66;8
divider Pictures, Images and Photos

رَبِّ إغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْن

இறைவா! என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீதான் கிருபையாளர்களில் மிகமேலானவன்.23;118
divider Pictures, Images and Photos


رَبِّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْلِيْ
 இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன். ஆகவே நீ என்னை மன்னிப்பாயாக!  28;16
divider Pictures, Images and Photos




رَبَّنَـا ظَلَمْنـَا أَنْفُـسَنَا وَإنْ لَّمْ تَغْفِـرْلَنَا وَتَرْحَمْنَـا لَنَكُـوْنَنَّ مِنَ الْخَاسِرِيْنَ

எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து, கிருபை செய்யா விட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்ட மடைந்தவர்களாகி விடுவோம்.  7;23
divider Pictures, Images and Photos


أَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيْمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ.

 யாஅல்லாஹ்! நிச்சயமாக நீயே மன்னிப்பவன். கண்ணியத்திற்குரியவன். மன்னிப்பை விரும்புகின்றவன். எனவே என்னை மன்னித்தருள்வாயாக!
divider Pictures, Images and Photos
أَللَّهُمَّ اغْفِرْلِيْ، وَارْحَمْنِيْ، وَاهْدِنِيْ، وَعَافِنِيْ، وَارْزُقْنِيْ

யாஅல்லாஹ்! என்னை மன்னித்து விடுவாயாக! கிருபை செய்வாயாக! நேர்வழி காட்டுவாயாக! சுகமளிப்பாயாக! உணவளிப்பாயாக!
divider Pictures, Images and Photos
-أَللَّهُمَّ طَهِّرْنِيْ مِنَ الذُّنُوْبِ وَالْخَطَايَا،

 أَللَّهُمَّ َ نَقِّنِيْ مِنْهَا كَمَا يُنَقَّي الثَّوْبُ اْلأَبْيَضُ مِنَ الدَّنَسِ،

 أَللَّهُمَّ طَهِّرْنِيْ بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِالْبَارِدِ

யாஅல்லாஹ்! பாவங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் என்னைத் தூய்மைப் படுத்துவாயாக!
யாஅல்லாஹ்! அழுக்கிலிருந்து வெள்ளைத் துணியைத் தூய்மைப் படுத்தப்படுவதைப் போல் என்னை இவற்றிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக!
 யாஅல்லாஹ்! பனிக்கட்டி, பனித்துளி, குளிர்ந்த நீர் ஆகியவைகளைக் கொண்டு என்னை தூய்மைப் படுத்துவாயாக!
divider Pictures, Images and Photos

ஈருலக நன்மைக்காக




رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ


"எங்கள் இறைவனே எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!". (2:201)





Sunday, May 2, 2010

அறிமுகம்

அஸ்ஸலாமு அலைக்கும்.


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.


ஒருவருக்கொருவர் மார்க்க விளக்கங்களை பகிர்ந்து கொள்வதே இதன் நோக்கம்.


அல்குர் ஆன்,அல்ஹதீஸ் விளக்கங்கள், படித்ததில் பிடித்த நல்ல விஷயங்கள் போன்றவற்றை( பிறரின் ஆக்கங்களாகவும் இருக்கலாம்)தொகுத்தளிப்பதற்க்காக ஆரம்பிக்கிறேன்.
அனைவரும் பயனடைய வேண்டும் என விரும்புகிறேன்.
தற்காலத்தில் இணையத்தில் அதிக நேரம் செலவிடும் இளைய தலைமுறைகளுக்கு சில அடிப்படை மார்க்க விளக்கங்கள் கிடைக்க இதன்மூலம் முயற்சிக்கிறேன். 
 எனது பொறுப்பிலுள்ள,நான் சொல்லிக் கொடுக்க கடமைப்பட்டுள்ள என் அன்புச்செல்வங்கள் இதைப் பார்த்து பயனடைவார்கள் என ஆசிக்கிறேன்.வல்ல அல்லாஹ் இதன் நோக்கத்தை நிறைவேற்றி வைப்பானாக.ஆமீன்!


உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கும் சொல்லிக் கொடுங்கள்

நன்றி

தமிழ்,ஆங்கில இஸ்லாமிய இணையதளங்களுக்கு ஜஜாக்குமுல்லாஹூ கைர்.