RSS

Sunday, March 6, 2011

அல்குர்’ஆன் பற்றிய கேள்வி பதில்



 உம்முல் குர்ஆன்(குர்ஆனின் தாய்)என்பது எந்த சூராவைக் குறிக்கும்?
ஸூறத்துல் ஃபாத்திஹா(ஏழு வசனங்கள்)


தொழுகையில் அவசியம் ஓதப்பட வேண்டிய சூரா எது?
 அல்-பாத்திஹா

துஆ (பிரார்த்தனை) என குறிப்பிடப்படும் சூரா எது?
அல்-பாத்திஹா

 திருமறையின் தோற்றுவாய் என குறிப்பிடப்படும் சூரா எது?
அல்-பாத்திஹா

குர்ஆன் எந்த தூதருக்கு அருளப்பட்டது?
 இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு.

 நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆன் எத்தனை ஆண்டுகள் வஹீ மூலம் இறங்கியது?
23 ஆண்டுகள்
குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்கு எத்தனை நன்மைகள் உண்டு?
குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்கு 10 நன்மைகள் உண்டு.


 திருக் குர் ஆனில் பெயர் கூறப் பட்ட ஒரே பெண்மணி யார் ?
நபி ஈஸா(அலை) அவர்களின் தாய் மரியம் (அலை).




குர்ஆனின்  முதல் வசனம் இறங்கிய இடம்?
ஹிரா குகை


சூரா என்றால் என்ன?
குர்ஆனின் பாகம்


குர்ஆன் மக்காவில் எத்தனை ஆண்டுகள், மதீனாவில் ஆண்டுகள் இறங்கியது?
மக்காவில் : 13 ஆண்டுகள் , மதீனாவில் : 10 ஆண்டுகள்



அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்து உடையவர்கள் யார் என குர்ஆன் கூறுகிறது?
 தக்வா (இறையச்சம்) உடையவர்கள்

குர்ஆனில் மிகப்பெரிய அத்தியாயம் எது?
 சூரத்துல் பகரா (இரண்டாவது அத்தியாயம்)

குர்ஆனில் மிகச் சிறிய அத்தியாயம் எது?
 சூரத்துல் கவ்ஸர் (108 வது அத்தியாயம்)

குர்ஆனில் எத்தனை அத்தியாயங்கள் இருக்கிறது?
 114 அத்தியாயங்கள்


குர்ஆனை பாதுகாப்பது யார் பொறுப்பில் உள்ளது?
 அதை இறக்கிய இறைவனே அதன் பாதுகாவலன் ஆவான்.


அல்-குர்ஆனை மனனம் செய்த முதல் மனிதர் யார்?
முஹம்மது நபி (ஸல்) அவர்கள்

எதிர்கால சந்ததியினருக்கு அத்தாட்சியாக விட்டு வைக்கப்பட்டுள்ளவற்றில் இரண்டைக் கூறுக:
 நூஹ் (அலை) அவர்களின் கப்பல் (54:15), மற்றும் பிர்அவ்னின் உடல் (10:92)

நூஹ் நபியின் கப்பல் எங்கு ஒதுங்கியது என குர்ஆன் கூறுகிறது?
 ஜூதி மலையில் (11:44 )

குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே ஒரு ஸஹாபியின் பெயர் என்ன?
 ஜைத் பின் ஹாரித் (ரலி) அஹ்ஜாப் (33:37)

குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒரே ஒரு பெண்மணி யார்?
 மர்யம் (அலை)








உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கும் சொல்லிக் கொடுங்கள்

5 comments:

ஸாதிகா said...

அளப்பறிய ஆற்றல் மிக்க குர் ஆனை எளிமையாக அனைவரும் புரியும் படி சொல்லி இருந்தமை நன்று.

zumaras said...

ஸலாம் ஸாதிக்கா அக்கா. தொடர்ந்து உங்கள் வருகையையும் கருத்தையும் எதிர்பார்க்கிறேன்.

Aashiq Ahamed said...

அல்ஹம்துலில்லாஹ், நல்லதொரு பகிர்தல், தொடர்ந்து தாருங்கள்...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத்

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,

மன்னிக்கவும்...ஸலாம் கூறி தான் என்னுடைய கருத்தை தெரிவித்திருக்க வேண்டும். சைத்தான் மறக்கடித்து விட்டான். மன்னிக்கவும்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத்

zumaras said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆஷிக் அஹ்மத் அவர்கள்

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்கள்

நன்றி

தமிழ்,ஆங்கில இஸ்லாமிய இணையதளங்களுக்கு ஜஜாக்குமுல்லாஹூ கைர்.