RSS

Tuesday, July 26, 2011

தயம்மும் ஓர் விளக்கம்

  1.  உளூவுக்கான மாற்றுப் பரிகாரம்
தொழுகை நேரம் வந்து உளூச் செய்வதற்கான தண்ணீர் கிடைக்காவிட்டால் அல்லது தண்ணீர் கிடைத்து அதைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தால் அதைக் காரணம் காட்டி தொழாமல் இருக்க முடியாது. மாறாக தூய்மையான மண்ணைப் பயன்படுத்தி உளூவுக்கு மாற்றுப் பரிகாரமான தயம்மும் செய்து அதன் பின்பே தொழ வேண்டும்.

சில நேரங்களில் உளூச் செய்வதற்கோ, கடமையான குளிப்பை குளிப்பதற்கோ தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படலாம். அல்லது தண்ணீர் இருந்தும் கடுங்குளிர், நோய் காரணங்களால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். அல்லது தண்ணீரும் இருந்து பயன்படுத்தக் கூடிய நிலையும் இருந்து உளூச் செய்வதாலோ, கடமையான குளிப்பை குளிப்பதாலோ குடிப்பதற்கு தண்ணீர் இல்லாது போய் விடுமோ என்ற பயம் ஏற்படலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் உளூவிற்கும் கடமையான குளிப்பிற்கும் மாற்றுப் பரிகாரமே தயம்மும் என்பதாகும்.

தயம்மும் செய்யும் முறை: 


ஒளு அல்லது குளிப்பிற்காகத் தயம்மும் செய்கிறேன் என நிய்யத் செய்து கொண்டு


1. இரு உள்ளங்கைகளையும் தூய்மையான மண்ணில் அடித்து,


2.கைகளை புறங்கைகளால் தட்டிவிட்டு முகத்தில் ஒரு தடவை மேலிருந்து கீழாகவும்
                                                                                                


2.மற்றொரு தடவையும் முன் போல் அடித்து இரு கைகளிலும் முழங்கை வரை தடவிக் கொள்ள வேண்டும்.


முழங்கைகளை தடவும்பொழுது கீழ்கானும் படங்களை கவனிக்கவும்.







 உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கும் சொல்லிக் கொடுங்கள்

3 comments:

Jaleela Kamal said...

அஸ்ஸலாமு அலைக்கும்

மிகவும் அருமையான விளக்கம்.

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

இந்த வலைப்பூவை புதிதாக இஸ்லாத்தை ஏற்ற என் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள்

zumaras said...

ஸலாம்
இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்கிறேன்.

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்கள்

நன்றி

தமிழ்,ஆங்கில இஸ்லாமிய இணையதளங்களுக்கு ஜஜாக்குமுல்லாஹூ கைர்.